| கள்ளக்காதல் கொலையில் மேலும் ஒருவர் கைது Dinamalar
கள்ளக்காதல் கொலையில் மேலும் ஒருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2019
23:43

சிங்கம்புணரி : எஸ்.புதுார் கானப்பட்டியில் பாலத்தின் கீழ் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜா விசாரித்தார். அதில் இறந்தவர் வலசைபட்டியை சேர்ந்த முருகையா 40, கொத்தனார் என தெரிந்தது. விசாரித்ததில் ஜூன் 13ம் தேதி முருகையாவை கொலை செய்து பாலத்தில் கீழ் போட்டது தெரியவந்தது.போலீசார் கூறியதாவது: கொலையான முருகையாவின் மனைவி மணிமேகலைக்கும் 36, முருகையா தம்பி பிச்சமணிக்கும் 34, கள்ளக்காதல் இருந்துள்ளது.



இதை அறிந்த முருகையா தன் மனைவியை கண்டித்துள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முருகையாவை கொலை செய்யும் நோக்கில், மணிமேகலை துாண்டுதலில் அவரது தம்பியே அவரது கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் மணிமேகலை, பிச்சமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த கொலை வழக்கில் நேற்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். எஸ்.புதுாரை சேர்ந்த அலகு மகன் கார்த்திக் 20 என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் இறந்த முருகையாவின் மகளை கார்த்திக்கின் அண்ணன் காதலித்து திருமணம் செய்துள்ளார்.



இந்த பிரச்னையில் கார்த்தியின் அம்மாவை முருகையா அடித்துள்ளார். இதனால் கார்த்தி, முருகையா இடையே முன்விரோதம் இருந்துள்ளது. கார்த்தி, பிச்சமணி இருவரும் உறவினர்கள். வாடகை வாகனம் ஓட்டி ஒரே தொழில் செய்வதால் இருவருக்கும் நெருங்கிய பழக்கம் உள்ளது. இந்நிலையில் முருகையா கொலை வழக்கில் மணிமேகலை, பிச்சமணியை தொடர்ந்து கார்த்திக் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X