| முன்னாள் மாணவர்கள் சந்திப்பு Dinamalar
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2019
23:48

திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே ஆ.தெக்கூர் ஸ்ரீவிசாலாட்சி கலாசாலை மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்தித்தனர்.இப்பள்ளியை நிறுவிய கருமுத்து தியாராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் மாணவர் சங்கத்தினர் பழைய மாணவர்களை அழைத்திருந்தனர்.நேற்று பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கூடினர். முதல்வர் சுரேஷ் வரவேற்றார். தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.



செயலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளி குடிநீர் பிரச்னையை சமாளிக்க ரூ 2 லட்சத்தில் ஆர்.ஓ. முறையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவவும், பாடம் நடத்த புரெக்ஜடர் கருவி வாங்கித் தரவும், பொது எந்திரவியல் மாணவர்களுக்கு டிரில்லிங் மெஷின் வாங்கித் தரவும் முடிவானது. மேலும் ஆண்டு தோறும் இதே நாளில் சந்தித்து பள்ளியின் வளர்ச்சிக்கு உதவவும் முடிவெடுத்தனர். பல ஆண்டுகளில் படித்த மாணவர்கள் சந்திப்பின் போது பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.பொருளாளர் கனகு நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X