| குடிநீர் கேட்டு சாலை மறியல் Dinamalar
குடிநீர் கேட்டு சாலை மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
00:26

ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், நேற்று, இரண்டு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு வந்து, குடிநீர் கேட்டு மனு அளித்தும், மற்றொரு கிராமத்தினர், சாலை மறியலில் ஈடுபட்டும், ஒன்றிய அதிகாரிகளை ஒரே நாளில் திணற வைத்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்தனர்.ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தால், போலீசாரும், ஒன்றிய அதிகாரிகளும் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.



குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபடும் பொதுமக்களை, அரும்பாடுபட்டு சமரசம் செய்து வருகின்றனர்.நேற்று, அம்மையார்குப்பம் மற்றும் வங்கனுார் ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் தண்ணீர் கேட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றிய அலுவலகத்திற்கு பெரும்திரளாக வந்திருந்தனர். குடிநீர் வினியோகம் மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி மனு அளித்து கலைந்து சென்றனர். அதே நேரத்தில், நீலோத்பாலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, காந்தி நகர் பொதுமக்கள், குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து, சோளிங்கர் - வாலாஜாபேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.



ஆர்.கே.பேட்டை போலீசார் சென்று அவர்களை சமரசம் செய்ய முயன்றனர். ஆனாலும், பொதுமக்கள் பிடிவாதமாக இருந்ததால், ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக, இந்த மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதன் பின், ஆர்.கே.பேட்டை ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, ஆழ்துளை கிணறு அமைப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று மறியல் கைவிடப்பட்டது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X