| நெமிலிச்சேரி சாலை சந்திப்பில் விபத்து அபாயம் Dinamalar
நெமிலிச்சேரி சாலை சந்திப்பில் விபத்து அபாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
00:35

மீஞ்சூர் : மீஞ்சூர்- - நெமிலிச்சேரி சாலை சந்திப்பு பகுதியில், வாகனங்கள் தாறுமாறாக சென்று வருவதால், விபத்து அபாயமும், அசம்பாவிதங்களுக்கும், வாய்ப்பு உள்ளது.கனரக வாகனம்மீஞ்சூர், பி.டி.ஓ., அலுவலகம் அருகே, நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையும், திருவொற்றியூர் நெடுஞ்சாலையும் சந்திக்கும் பகுதி உள்ளது. துறைமுகங்கள், ஆயில் நிறுவனங்கள், கன்டெய்னர் கிடங்குகள் ஆகியவற்றில் இருந்து, நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த சாலைகளில் பயணிக்கின்றன.



அசுர வேகத்தில் பயணிக்கும் இவை, மேற்கண்ட சாலை சந்திப்பில் வந்து திரும்பும்போது தாறுமாறாக செல்கின்றன. மீஞ்சூரில் இருந்து, சென்னை சென்று வரும் வாகனங்கள் மேற்கண்ட சாலை சந்திப்பு பகுதியை கடக்கும்போது தடுமாற்றத்துடன் செல்கின்றன.கனரக வாகனங்கள், தாறுமாறாக சென்று திரும்பும்போது விபத்துக்களும், அதனால் அசாம்பா விதங்களும், ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேகத்தடைநீண்ட நீளம் கொண்ட கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், வெளிவட்ட சாலையில் இருந்து, மீஞ்சூர் சாலைக்கு திரும்பும்போது வேகமாக செல்கின்றன.



இதனால், கன்டெய்னர்கள் விழுந்து மற்ற வாகனங்கள் விபத்தில் சிக்கும். மேற்கண்ட சாலை சந்திப்பு பகுதியில் தேவையான இடங்களில் இரும்பு தடுப்புகள் மற்றும் வேகத்தடைகள் அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X