எச்சரிக்கை! விதிமீறி சாலை தோண்டுவோருக்கு மாநகராட்சி... கடும் நிபந்தனைகள் விதித்து அறிவிப்பு வெளியீடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

18 ஜூன்
2019
06:31
பதிவு செய்த நாள்
ஜூன் 18,2019 01:11

சென்னை : ''சாலை வெட்டின் போது, விதியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மீறுவோரின் விண்ணப்பத்தை நிராகரிப்பு செய்வதுடன், கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் தெரிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சியில், 387.98 கி.மீ., நீளமுள்ள, 472 பேருந்து சாலைகள், 5,204.36 கி.மீ., நீளமுள்ள, 33 ஆயிரத்து, 601 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.



இந்த சாலைகளை மேம்படுத்துவது குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், கமிஷனர் பிரகாஷ் தலைமையில், ரிப்பன் மாளிகையில், சமீபத்தில் நடந்தது.இது தொடர்பாக, கமிஷனர், பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம், மின் வாரியம், தொலைபேசி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு, அத்துறைகள் வாயிலாக பெறப்படும் கோரிக்கை அடிப்படையில் மற்றும் சாலைகளை சமன் செய்ய, நிறுவனங்கள் வைப்பு தொகையை செலுத்திய பின், அனுமதி வழங்கப்படுகிறது.



போக்குவரத்து போலீஸ் முன் அனுமதி பெற்று, சாலை வெட்டு பணி மேற்கொள்ள வேண்டும் சாலை வெட்டு மேற்கொள்ளும் இடத்தில், விபத்து ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை தடுப்புகள், எச்சரிக்கை விளக்குகள், சிவப்பு கொடிகள் போன்றவை, பணி நடைபெறும் இடத்தில், கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்குறுந்தகடு சாலை வெட்டை மேற்கொள்வதற்கு முன், குழாய்கள் பதித்த பின், மின்னஞ்சல் வாயிலாக, பேருந்து சாலைகள் துறை செயற்பொறியாளருக்கு தெரிவிக்க வேண்டும்.




சாலை வெட்டு மேற்கொள்ளும் முன், பின் மற்றும் பணி நிகழ்வை, காணொலி வடிவத்தில், குறுந்தகட்டில் பதிவு செய்து, அளிக்க வேண்டும் சேவை துறையில், ஏற்கனவே நடந்த பணியின், சாலை வெட்டு விபரங்கள் அடங்கிய குறுந்தகடு பெறப்பட்டப்பின் தான், புதிதாக விண்ணப்பங்கள் பெறப்படும் சாலை வெட்டின் நீளம் மற்றும் அகலம் போன்றவைகள், சாலை வெட்டு அனுமதிக்கப்பட்ட அளவுகளை மீறி மேற்கொள்ளக் கூடாது சாலை வெட்டினை சீர் செய்வதற்கு ஏதுவாக இருக்க, சாலை மட்டத்திலிருந்து, 1 மீட்டர் தாழ்வாக குழாய்களை பதிக்க வேண்டும் விபத்தை தவிர்க்கும் பொருட்டு, கேபிள் இணைப்பு அறையின் மூடியானது, சாலை மட்டத்திற்கு, மேலேயோ அல்லது கீழேயோ இருத்தல் கூடாது.



அனைத்து விதமான சாலை வெட்டுகளும், நடைபாதையிலோ அல்லது நடைபாதையின் ஓரத்திலோ, சாலையை சேதம் செய்யா வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டும் நடைபாதையின் ஓரத்தில் உள்ள நடைபாதை கற்களுக்கு, 0.3 மீட்டர் தொலைவிற்கு, சாலை வெட்டு மேற்கொள்ள வேண்டும். சிரமம் ஏற்படும் பட்சத்தில், மேற்பார்வை பொறியாளரிடம் அனுமதி பெற வேண்டும் சாலை வெட்டு பணி, சரியான அளவில், சாலை வெட்டு இயந்திரத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டும் சாலை வெட்டு பணி மேற்கொள்ளும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனம், ஒரு பொறுப்பாளரை நியமிக்க வேண்டும்.



அப்பொறுப்பாளரின் மொபைல் எண், மின்னஞ்சல் தெரிவிக்க வேண்டும்கடிதம் சாலை வெட்டு பணி மேற்கொள்வதற்கான அனுமதி, 30 நாட்களுக்கு மட்டுமே செல்லும். சாலை வெட்டு அனுமதி கடிதத்தில், குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடு வரை தான் அனுமதி செல்லும். அவ்வாறு முடியாத பட்சத்தில், கால நீட்டிப்பு அனுமதி கோரி, மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் சாலை வெட்டு பணி மேற்கொள்ளும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், சாலை வெட்டு அனுமதி கடிதத்தை, அலுவலர்கள் கேட்கும் நேரங்களில், காண்பிக்க வேண்டும்.



இந்த நிபந்தனைகளை கடைப்பிடித்து, பொதுமக்களுக்கு இடையூறின்றி, சாலை வெட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, பிரகாஷ் அறிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.P SARATHI - chennai,இந்தியா
18-ஜூன்-201920:25:18 IST Report Abuse
K.P  SARATHI குறுகிய தெருவில் நடை பாதை தாண்டி சாலையில் போர் பம்ப் தங்கள் சொந்த வீட்டிற்காக போடுகிறார்கள் மேலும் நடை பாதையை ஆக்ரிமிது தங்கள் வீட்டிற்கு படிக்கட்டுகளை அமைக்கிறார்கள் இதை தடுப்பது யார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X