என்கவுன்டரில் ரவுடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
01:19

சென்னை : என்கவுன்டரில், ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், பதிலளிக்கும் படி, உள்துறை செயலருக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவன் வல்லரசு, 20; ரவுடியான இவன், வட சென்னை, மத்திய சென்னை பகுதிகளில், சில ஆண்டுகளாக அட்டகாசம் செய்து வந்தான்.இவன், கொலை, கொலை முயற்சி, கொள்ளை, ஆள்கடத்தல், கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தான்.



இவன் மீது, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாதவரம் பேருந்து நிறுத்தம் பின்புறம் பதுங்கியிருந்த வல்லரசுவை பிடிக்க சென்ற போலீசாரை, அவன் அரிவாளால் வெட்டியுள்ளான். இதனால், வல்லரசுவை, 15ம் தேதி அதிகாலை, போலீசார் சுட்டுக் கொன்றனர்.சம்பவம் குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.ஆணைய தலைவர், டி.மீனாகுமாரி பிறப்பித்த உத்தரவு:ரவுடி என்கவுன்டர் சம்பவம் குறித்து, விரிவான விசாரணை நடத்தி, உள்துறை செயலர், ஆறு வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்.



அதேபோல், என்கவுன்டர் சம்பவம் குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணைய, டி.ஜி.பி., விசாரணை நடத்தி, எட்டு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X