போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
01:20

மாணவியிடம் மொபைல் பறிப்புதிருவொற்றியூர்: திருவொற்றியூர், கார்கில் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்; கூலித்தொழிலாளி. இவரது மகள் புனிதவள்ளி, 16; பிளஸ் 1 மாணவி. நேற்று முன்தினம் மாலை, யோகா வகுப்பு செல்வதற்காக, சத்தியமூர்த்தி நகர், கெனால் ரோடு சந்திப்பு வழியாக நடந்து சென்ற போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், மொபைல் போனை பறித்து தப்பினர்.சாத்தாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைதுஅபிராமபுரம்: அபிராமபுரம் போலீசார், நேற்று முன்தினம் இரவு, காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில், திடீர் சோதனை நடத்தினர். அங்கு, அபிராமபுரத்தைச் சேர்ந்த, கனி, 45, ராமச்சந்திரன், 37, உட்பட, ஆறு பேர், சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிந்தது.



நேற்று காலை, அவன்களை கைது செய்த போலீசார், 7,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.இரு தரப்பு தாக்குதலில் நால்வர் கைதுதுரைப்பாக்கம்: துரைப்பாக்கம், சாய் நகரைச் சேர்ந்த ராஜ், 24, ஜெகன், 20. இருவரும், நேற்று முன்தினம் இரவு, துரைப்பாக்கம் பிரதான சாலையில் நின்றனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற, கண்ணகி நகரைச் சேர்ந்த தேவா, 20, சுந்தரமூர்த்தி, 25, ஆகியோர், கூச்சல் போட்டு உள்ளனர். ராஜ் தட்டி கேட்டுள்ளார். இதில், இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர், தாக்கி கொண்டனர். விசாரித்த துரைப்பாக்கம் போலீசார், நேற்று, நான்கு பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.



'பார்' ஊழியர்கள் மீது தாக்குதல்வேளச்சேரி: வேளச்சேரி விரைவு சாலையில் உள்ள, 'டாஸ்மாக்' கடையில், நேற்று மாலை, ஐந்து பேர் மது அருந்த சென்றனர். டாஸ்மாக் ஊழியர்களிடம், குறிப்பிட்ட நிறுவன, 'பீர்' வகைகளை கேட்டுள்ளனர். பாரில் வாங்க வலியுறுத்தி யும் உள்ளனர். 'பார்' ஊழியர் அஜித், பீருக்கு, 40 ரூபாய் அதிகம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில், குடிக்க சென்றோருக்கும், அஜித்துக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 'பார்' ஊழியர்கள், ஐந்து பேரையும், கையால் தாக்கி உள்ளனர். பதிலுக்கு அவர்கள், பீர் பாட்டிலால், 'பார்' ஊழியர்களை தாக்கினர். இதில், அஜித், 28, பெருமாள், 30, ஆகிய 'பார்' ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.



வேளச்சேரி போலீசார், தப்பிய, ஐந்து பேரையும் தேடி வருகின்றனர்.வாலிபர் கொலையில் ஒருவன் கைதுமயிலாப்பூர்: மயிலாப்பூர்,பல்லக்கு மாநகரைச் சேர்ந்த, தினேஷ், 32. நேற்று முன்தினம், ராயப்பேட்டை நெடுஞ்சாலையில், ஆட்டோவில் வந்த மர்மநபர்கள், இவரை, அரிவாளால் வெட்டி தப்பினர். படுகாயமடைந்த தினேஷ், ராயப்பேட்டை மருத்துவமனையில், அன்று இரவே உயிரிழந்தார்.விசாரித்த மயிலாப்பூர் போலீசார், திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, நாகமணி, 30, என்பவன், தன் நண்பன் ராஜேஷுடன் சேர்ந்து, தினேஷை கொலை செய்தது தெரிந்தது.



மேலும், கள்ளக்காதல் விவகாரத்தில், ராஜேஷுக்கும், தினேஷுக்கும், முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. நாகமணியை கைது செய்த போலீசார், ராஜேஷை தேடி வருகின்றனர்.மொய் பணம் திருடியவன் கைதுநீலாங்கரை: முகப்பேரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 32. தன் குழந்தையின் பிறந்த நாளை, மே, 19ம் தேதி, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள, ஓட்டலில் கொண்டாடினார்.



இதில், அன்பளிப்பாக கிடைத்த, 16 ஆயிரம் ரூபாயை, பையில் போட்டு, ஒரு இடத்தில் வைத்துள்ளார்.விழா முடிந்த பின், பையை பார்த்தபோது, பணம் வைத்த பை மாயமானது தெரிந்தது. நீலாங்கரை போலீசாரின் விசாரணையில், கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த சரவணன், 39, என தெரிந்தது. அவனை நேற்று, கைது செய்த போலீசார், பணத்தை மீட்டனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X