குப்பைகளால் துர்நாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
01:29

ஆத்துார் சேவியர்தெரு, அக்ரஹாரம் பகுதிகளில் கழிவுகள் சரிவர அள்ளப்படுவதில்லை. முழுமையாக அகற்றுவதில் அலட்சியத்தால், துர்நாற்றத்துடன் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.-எம்.சன்னாசி, ஆத்துார்.---* கசவனம்பட்டி அருகே போத்திநாயக்கன்பட்டி காலனியில், ரோட்டோரங்களில் கழிவுகளை குவிக்கின்றனர். துர்நாற்றத்துடன் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.ஜி.சந்திரன், போத்திநாயக்கன்பட்டி.---ஆக்கிரமிப்புகளால் அவதிஆத்துார் ஒன்றியம், தேவரப்பன்பட்டியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. அகலம் குறுகி, வாகன விபத்து தொடர்கிறது.



ஊரக வளர்ச்சித்துறை, இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-டி.ரங்கசாமி, தேவரப்பன்பட்டி.-----* சித்தையன்கோட்டை சேடபட்டியில், ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. அகலம் குறுகி வாகன விபத்துகள் நடக்கிறது.-எஸ்.சந்தனராம், சேடபட்டி.---வேகத்தடையால் பாதிப்புபித்தளைப்பட்டி-தருமத்துப்பட்டி ரோட்டில், உயரமான வேகத்தடைகளால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். தடைகளின் உயரத்தை முறைப்படுத்த வேண்டும்.-



வி.ராகவன், மேலப்பட்டி.* ஆத்தூர் ஒன்றியம், வீரக்கல் - -வட்டப்பாறை ரோட்டில் பல உயரமான வேகத்தடைகள் உள்ளன. இருசக்கர வாகனத்தில் செல்வோர் பாதிப்படைகின்றனர். வேகத்தடையை முறையாக அமைக்க வேண்டும்.--எம்.நாகப்பன், வடக்கு மேட்டுப்பட்டி. கூடுதல் டவுன் பஸ் தேவைவட்டப்பாறை வழியே வீரக்கல் தடத்தில், போதிய அரசு டவுன் பஸ் வசதி இல்லை. மாணவர்கள், நோயாளிகள் போக்குவரத்து வசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை தேவை.-ஆர்.சீத்தாராமன், தெற்குமேட்டுப்பட்டி



-கூடுதல் கட்டண வசூல்திண்டுக்கல்--சின்னாளபட்டி வழித்தடத்தில் இயங்கும் தனியார் பஸ்களில், அரசு பஸ்களைவிட 3 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கின்றனர். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.-ஆர்.முருகவள்ளி, காந்திகிராமம்.---தவிக்கும் பயணிகள்கன்னிவாடி பஸ் ஸ்டாப்பில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் தாகத்தில் தவிக்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டி அமைக்க முன்வர வேண்டும்.--ஏ.ஜேசுதாஸ், கன்னிவாடி.மின்மாற்றி பழுதுவடமதுரை அண்ணாநகர் தபால் நிலையம் அருகில் மின்மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி அடிக்கடி பழுதடைகிறது.



இதனால் குடியிருப்பு வாசிகள் இருளில் தவிக்கும் நிலை அடிக்கடி ஏற்படுகிறது. புதிய மின்மாற்றி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பெருமாள், வடமதுரை.ரோடு வசதியில்லைஅய்யலுார் நாகப்பபிள்ளை களத்திற்கு முறையான ரோடு வசதி இல்லை. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கிராமத்திற்கு செல்வதில் சிக்கல் உள்ளது. இங்கு ரோடு வசதி செய்து தர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பாஸ்கர், அய்யலுார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X