| முற்றுகை, தர்ணாவால் திணறிய கலெக்டர் அலுவலகம் Dinamalar
முற்றுகை, தர்ணாவால் திணறிய கலெக்டர் அலுவலகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
01:44

-மதுரை : மதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்க வந்தவர்கள் முற்றுகை, தர்ணாவில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகம் திணறியது.மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமார் தலைமையில் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.துப்புரவு பணியாளர்கள் தர்ணாமாநகராட்சி தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடத்தினர்.



பின் அவர்கள் கூறியதாவது: நிரந்தர பணியாளர்களுக்கு காலம் தாழ்த்தாமல் 7வது சம்பளக்குழு பரிந்துரைபடி சம்பளம் மற்றும் நிலுவைத்தொகை வழங்க வேண்டும். மாநகராட்சி, கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 6 மாத சம்பள நிலுவையை வழங்க வேண்டும். பிடித்தம் செய்த பி.எப்., இ.எஸ்.ஐ., பங்களிப்பு தொகையை சேமிப்பு கணக்கில் காட்ட வேண்டும் என்றனர்.மதுக்கூடமாக நுாலகம்பா.ஜ., மாவட்ட செயலாளர் பெருமாள், மண்டல் தலைவர் நாகராஜன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு கருப்பாயூரணி பொது நுாலகத்திற்கு தினமும் மாணவர்கள் அதிகம் வந்து செல்கின்றனர்.



ஆனால் நுாலக பகுதியில் சிலர் மது அருந்தி தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் நுாலகத்திற்கு மாணவர்கள் செல்ல அச்சப்படுகின்றனர். அங்கு மது அருந்துவோர் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.கணவர் மீது நடவடிக்கைஜீவாநகர் பரகத்நிஷா அளித்த மனு: எனக்கும் முகமது பாரூக் என்பவருக்கும் 1990ல் திருமணம் நடந்தது. அவர் என்னை ஏமாற்றி நகைகள், சொத்துக்களை அபகரித்து கொண்டார்.



அவர் மீது போலீஸ், ஜமாத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஏமாற்றிய முகமது பாரூக், அவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கலெக்டர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். குழந்தைகளுக்கு எதிரான புகார் மனுக்கள் அளிப்பது குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களையும் வழங்கினார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X