கலெக்டர் கவனத்துக்கு!நொய்யலில் நடக்குது மணல் திருட்டு...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

18 ஜூன்
2019
02:24
பதிவு செய்த நாள்
ஜூன் 18,2019 01:50

பேரூர்:கரை புரண்டோடுகையில் வாழ்ந்த நாகரிகங்களை அழித்தும், புதைத்தும் உண்டவன், இன்று மாண்டு போய் கிடக்கிறான் மல்லாந்து!'--- இந்த பேச்சை உறுதிப்படுத்தும் செயலில், மணல் திருடர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களை தடுக்க வேண்டிய அரசுத்துறையினர், 'கவனிப்புக்கு' உள்ளாகி கமுக்கமாக வலம் வருகின்றனர்.


தற்போதைய கலெக்டராவது மணல் கொள்ளையர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, கோவை மற்றொரு சென்னையாக மாறுவதை தடுக்க வேண்டும்.கோவையின் உயிர்நாடியான நொய்யல் ஆற்றை, காசுக்காக கூறு போடும் வேலையில், மணல் கொள்ளையர் ஈடுபட்டுள்ளனர். தற்போது, மணல் தட்டுப்பாடுள்ளதால் செம்மேடு, தொம்பிலிபாளையம், ஆலாந்துறை, மாதம்பட்டி உள்ளிட்ட நொய்யல் வழித்தடத்தில், மணல் திருட்டு பகிரங்கமாக நடக்கிறது.எப்படி நடக்கிறது திருட்டு?இரவு நேரத்தில், மணலை தோண்டி எடுத்து, மூட்டைகளாக கட்டி வைக்கின்றனர். கூடுதுறை, பள்ளிவாசல் வீதி நொய்யல் ஆற்றில் டாரஸ், ஐஷர், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில், ஆற்றுக்குள் சென்று மணலை அள்ளி வருகின்றனர்.


இதனால் சுமார், 5 கி.மீ., தொலைவுக்கு, நொய்யல் சிதைக்கப்பட்டுள்ளது. கடத்தப்படும் மணல், அதிகாரிகளின் 'ஆசியுடன்', ஒரு லோடு ரூ.40 ஆயிரத்துக்குவிற்கப்படுகிறது.மணல் அள்ளப்படும் நொய்யல் பகுதிகளில், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் எட்டிக்கூட பார்ப்பதில்லை. அவர்களுக்கு வேண்டிய 'வருமானம்' வீடு தேடி சென்று விடுவதே காரணம் என்று, இப்பகுதி சூழல் ஆர்வலர்கள் புலம்பித்தீர்க்கின்றனர்.


இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், 'ரோந்து செல்கிறோம், தீவிரமாக கண்காணிக்கிறோம்' என்கின்றனர். அப்படி சென்றிருந்தால், ஆற்றுக்குள் வாகனங்கள் எப்படி செல்லும்? மணல் திருட்டு எப்படி நடக்கும்? என்பதே கேள்வி.மாவட்டத்தில் நடக்கும் மணல் திருட்டு குறித்து, பலமுறை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், ஊடகங்களும் சுட்டிக்காட்டியும், இதற்கு முன் இருந்த கலெக்டர்களும் சரி, கனிமவளத்துறை அதிகாரிகளும் சரி; கண்டுகொண்டதே இல்லை. இதனால் மணல் கொள்ளையர்களின் காட்டில், தொடர்ந்து பணமழை பொழிகிறது.


இவ்விஷயத்தில்,தற்போதுள்ள கோவை கலெக்டராவது, நேரடியாக தலையிட வேண்டும். மணல் திருடர்கள் குண்டர் சட்டத்தில், கைது செய்யப்பட வேண்டும். வாகனங்களைபறிமுதல் செய்ய வேண்டும்.உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, அடுத்த சென்னையாக கோவை மாறுவது உறுதி.மணல் அள்ளப்படும் நொய்யல் பகுதிகளில், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் எட்டிக்கூட பார்ப்பதில்லை. அவர்களுக்கு வேண்டிய 'வருமானம்' வீடு தேடி சென்று விடுவதே காரணம் என்று, இப்பகுதி சூழல் ஆர்வலர்கள் புலம்பித்தீர்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூன்-201907:54:07 IST Report Abuse
ஆப்பு அவருக்கும் தெரிஞ்சுதான் நடக்குதோ? இல்லே தலையிட்டா தூக்கிருவாங்களோங்கற பயமோ?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஜூன்-201907:44:26 IST Report Abuse
Bhaskaran ஆட்சியர் அலுவலக அதிகாரிகளுக்கு மாமூல் போவதால் இதனை பெரிதுபடுத்தமாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X