போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று யோசனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
01:53

போத்தனுார்:பொள்ளாச்சி, பாலக்காடு செல்லும் பஸ்களை குறிச்சி குளக்கரையில் நிறுத்த, மாநகர போலீஸ் கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், உக்கடம் - ஆத்துபாலம் மற்றும் ஈச்சனாரி பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. இதனால், மாநகருக்குள் செல்லும் வாகனங்கள், 8 கி.மீ., துாரம் சுற்றிச் செல்வதால், கடும் அவதி நிலவுகிறது. இதையடுத்து, பொள்ளாச்சி மற்றும் தென் மாவட்டங்கள், பாலக்காடு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மப்சல் பஸ்களை, குறிச்சி குளக்கரையில் நிறுத்தி, இயக்குவது குறித்து போலீஸ் கமிஷனர் சுமித்சரண் நேற்று மாலை ஆய்வு செய்தார்.அப்போது மேற்கு போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ராஜ்கண்ணா, கமிஷனரிடம், ''தினமும், 2,332 முறை மப்சல் பஸ்கள், நகருக்குள் வந்து செல்கின்றன. இக்குளக்கரை, 600 மீட்டர் நீளமுடையது. மூன்று நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு மப்சல் பஸ் புறப்பட்டு செல்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக பஸ்களை நிறுத்தி இயக்குவது எளிதாகும். பஸ்கள், ஆத்துப்பாலம் சென்று திரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தையொட்டி தடுப்புகள் அமைக்க வேண்டும்,'' என்றார்.''இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்து, பஸ்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கலாம்,'' என கமிஷனர் கூறினார்.துணை கமிஷனர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
18-ஜூன்-201914:42:01 IST Report Abuse
Ram கரும்பு தோட்டத்தை அழித்து மிதக்கும் வீடுகளை கட்டுபவர்களை மாநகராட்சி வேடிக்கை பார்க்கிறது. கோவிலுக்கு பின்,முன் பக்கம் குளக்கரை பாதையில் கனரக வாகனங்கள், சாலை வியாபாரிகள் குளத்தை சுத்தம் செய்துவிட்டார்கள். இனி பேருந்து பயணிகளும் கூட்டணி. பொங்காளி அம்மன் வெடிகுண்டயே பார்த்தவள் இதையும் ஒரு கை பார்ப்பாள்!
Rate this:
Share this comment
Cancel
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
18-ஜூன்-201914:40:01 IST Report Abuse
Ram கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளின் கண்மூடித்தனமான சேவையினால் கோவைக்கு மங்களம் பாடிவிட்டார்கள். உக்கடம் - ராமநாதபுரம் - போத்தனூர் -செட்டிபாளையம் வந்து மலுமிச்சம்பட்டியை அடைவதால் கட்டணம் ரூ.5/- அதிகம். ரூ.29/- ஐ ரூ.34/- ஆக்கியது நல்ல வளர்ச்சியா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X