| போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று யோசனை Dinamalar
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று யோசனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
01:53

போத்தனுார்:பொள்ளாச்சி, பாலக்காடு செல்லும் பஸ்களை குறிச்சி குளக்கரையில் நிறுத்த, மாநகர போலீஸ் கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், உக்கடம் - ஆத்துபாலம் மற்றும் ஈச்சனாரி பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. இதனால், மாநகருக்குள் செல்லும் வாகனங்கள், 8 கி.மீ., துாரம் சுற்றிச் செல்வதால், கடும் அவதி நிலவுகிறது. இதையடுத்து, பொள்ளாச்சி மற்றும் தென் மாவட்டங்கள், பாலக்காடு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மப்சல் பஸ்களை, குறிச்சி குளக்கரையில் நிறுத்தி, இயக்குவது குறித்து போலீஸ் கமிஷனர் சுமித்சரண் நேற்று மாலை ஆய்வு செய்தார்.அப்போது மேற்கு போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ராஜ்கண்ணா, கமிஷனரிடம், ''தினமும், 2,332 முறை மப்சல் பஸ்கள், நகருக்குள் வந்து செல்கின்றன. இக்குளக்கரை, 600 மீட்டர் நீளமுடையது. மூன்று நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு மப்சல் பஸ் புறப்பட்டு செல்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக பஸ்களை நிறுத்தி இயக்குவது எளிதாகும். பஸ்கள், ஆத்துப்பாலம் சென்று திரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தையொட்டி தடுப்புகள் அமைக்க வேண்டும்,'' என்றார்.''இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்து, பஸ்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கலாம்,'' என கமிஷனர் கூறினார்.துணை கமிஷனர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X