| குடிநீர் சப்ளையில் பாரபட்சம்:  கிராம மக்கள் குற்றச்சாட்டு Dinamalar
குடிநீர் சப்ளையில் பாரபட்சம்:  கிராம மக்கள் குற்றச்சாட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
02:11

திருப்பூர்:திருப்பூர் ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சியில், பரமசிவம்பாளையம், மாரப்பம்பாளையம் புதுார், பள்ளிபாளையம், காளம்பாளையம், பொங்குபாளையம் கிராம மக்களுக்கு, 3வது திட்டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது.பொதுமக்களுக்கு ஆர்.எஸ்., புரம் தரைமட்ட தொட்டியில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மக்களிடையே பாரபட்சம் காட்டும் வகையில், சில கிராம மக்களுக்கு மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பல கிராமங்களுக்கு வழங்கப்படுவதில்லை.இரண்டாவது குடிநீர் திட்டத்தில், தினமும், 50 ஆயிரம் லிட்டர் ஒதுக்கப்பட வேண்டும்; ஆனால், ஒதுக்கீடு குறைவாக இருப்பதால், 20 நாட்களாக சில பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. கிராமப்புற மக்களிடையே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு, பாரபட்சமின்றி குடிநீர் வினியோகம் செய்ய, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என, மா.கம்யூ., கட்சியினர், நேற்று கலெக்டரை சந்தித்து, மனு கொடுத்துள்ளார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X