| ஆஸி., ஆயத்த ஆடை கண்காட்சி Dinamalar
ஆஸி., ஆயத்த ஆடை கண்காட்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
02:12

திருப்பூர்:ஆஸ்திரேலியாவில் நடைபெறஉள்ள கண்காட்சியில் பங்கேற்று, ஏற்றுமதியை அதிகரிக்க, திருப்பூர் பின்னலாடை துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவின் ஆடை தேவை அதிகரித்துவருகிறது. சீனா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து, அந்நாட்டு வர்த்தகர்கள் ஆயத்த ஆடைகளை அதிகளவு இறக்குமதி செய்கின்றனர். கடந்த 2017 ல், மொத்தம் ரூ.41,264.34 கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகளை ஆஸ்திரேலியா இறக்குமதி செய்துள்ளது; இது, கடந்த 2018 ல், 43,604.12 கோடியாக உயர்ந்துள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகளுக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த 2017 ல், மொத்தம் ரூ.1,303.949 கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகளை இந்தியாவிலிருந்து, ஆஸ்திரேலியா இறக்குமதி செய்துள்ளது; இந்த இறக்குமதி, கடந்த 2018 ல், 1352.50 கோடியாக அதிகரித்துள்ளது.ஆஸ்திரேலிய சந்தையில் வர்த்தக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அந்நாட்டுக்கான நமது நாட்டு ஆடை ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் முயற்சித்துவருகிறது; ஆஸ்திரேலியாவில் நடக்கும் கண்காட்சிகளில், இந்திய ஆடை உற்பத்தியாளர்களை அதிகம் பங்கேற்க செய்கிறது.ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இன்டர்நேஷனல் சோர்ஷிங் எக்ஸ்போ (ஐ.எஸ்.இ.ஏ.,) கண்காட்சி, மெல்போர்ன் நகரில், வரும் நவ., 12ல் துவங்கி 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில், இந்திய ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க, ஏ.இ.பி.சி., ஏற்பாடு செய்துள்ளது. கண்காட்சியில், இந்திய ஏற்றுமதியாளர்களுக்காக பிரத்யேக அரங்கு ஒதுக்கப்படுகிறது.ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளைச்சேர்ந்த மிகப்பெரிய வர்த்தகர்கள் ஏராளமானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய வர்த்தக வாய்ப்புகளை கைப்பற்றும்வகையில், இந்த கண்காட்சியில், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் அதிகளவு பங்கேற்க, ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது. வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிப்போருக்கு, அரங்க கட்டண தொகையில் 10 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது.கண்காட்சி குறித்து தகவல் பெற, 0421 -2232634 என்கிற எண்ணில் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X