'குளங்களை தூர்வாரி மழைநீரை தேக்க வேண்டும்!' குடிநீர் தட்டுப்பாட்டை சீரமைக்க வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
02:13

திருப்பூர்:எதிர்காலத்தில், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க, குளம், குட்டைகளை துார்வாரி, மழைநீர் வீணாகாமல் தேக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பழனிசாமி, டி.ஆர்.ஓ., சுகுமார் ஆகியோர், மனுக்களை பெற்றனர். பொதுமக்கள், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, மனு கொடுத்தனர். மடத்துக்குளம் தாலுகா, கழுகரை மக்கள் கொடுத்த மனுவில், 'மடத்துக்குளம் பேரூராட்சி, கழுகரை கிராமத்தில், 120 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றன. அடிப்படை வசதியின்றி, அப்பகுதி மக்கள் தவிக்கின்றனர். போதிய இடவசதி இல்லாததால், புதிய வீட்டுமனை வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்ட நா.த.க., நிர்வாகிகள் கொடுத்த மனுவில், 'தேர்தல் காரணமாக, மே 1ம் தேதி நடக்க வேண்டிய, கிராமசபை கூட்டம் நடக்கவில்லை. கிராமசபா நடக்காததால், மக்கள் பிரச்னைகளை தீர்க்க இயலவில்லை. எனவே, சிறப்பு கிராமசபா கூட்டம் நடத்த வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர். பல்லடம் தாலுகா, மாதப்பூர் கிராமத்தை சேர்ந்த, மாற்றுத்திறனாளி மூதாட்டி உண்ணாத்தாள் கொடுத்த மனுவில், 'எனது குடும்பம், நீண்ட நாட்களாக வசிக்கும் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். அரசு நிலத்தை அளப்பதாக கூறி, எனது நிலத்தையும் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்; எனது பட்டாவில் உள்ள நிலத்தை மீட்டுத்தர வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், 'அரசு அறிவித்தபடி, தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதில்லை. அதிக கட்டணம் கேட்டு, பெற்றோர் துன்புறுத்தப்படுகின்றனர். அரசு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர். காந்திய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் கொடுத்தமனுவில், 'திருப்பூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள, குளம், குட்டைகளை போர்க்கால அடிப்படையில் துார்வார வேண்டும். மழைநீரை சேகரிக்கும் திட்டத்தையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும்.எதிர்காலத்தில், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க, குளம், குட்டைகளை துார்வாரி, மழைநீர் வீணாகாமல் தேக்க வேண்டும். துார்வாரப்படும் வண்டல் மண்ணை, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பாளையம் மக்கள் கொடுத்த மனுவில், 'அலகுமலை கோவில்பாளையம் மக்களுக்கு, அத்திக்கடவு திட்ட குடிநீர் கிடைப்பதில்லை. ரோடு விரிவாக்க பணியால், குடிநீர் வரத்து குறைந்துவிட்டது.புதிய குழாய்பதித்து, அதற்கு பிறகு, ரோடு விரிவாக்கபணிகளை செய்ய உத்தரவிட வேண்டும். மின்மோட்டாரை, ஊராட்சி பணியாளர் எடுத்துச்சென்றதால், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X