| மயானத்தில் வீசப்பட்ட மருந்துகள் Dinamalar
மயானத்தில் வீசப்பட்ட மருந்துகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
02:14

திருப்பூர்:தாராபுரம் அருகே அலங்கியத்தில் சுடுகாட்டில் வீசப்பட்ட மருந்துகளை கைப்பற்றி, சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.அலங்கியம் அமராவதி ஆற்றுப்பாலம் அருகே உள்ள சுடுகாட்டையொட்டி, மருந்துகள் கொட்டப்பட்டு கிடந்ததை பொதுமக்கள் பார்த்தனர். இதுகுறித்து அலங்கியம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அப்பகுதிக்கு சென்று போலீசார் விசாரித்தனர். அதில், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரை, ஓ.ஆர்.எஸ்., மருந்து உள்ளிட்டவை இருந்தது தெரிந்தது. சில மருந்துகள் காலாவதியாகியும், சில ஆகாமல் இருந்தது தெரிந்தது.மருந்துகள் அனைத்தும், வருவாய்த்துறையினர் மூலமாக, ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கப்படும் மருந்துகள் காலாவதியாகும் பட்சத்தில், அதை உயரதிகாரிகள் அனுமதி பெற்று முறைப்படி அழிக்க வேண்டும்.ஆனால், பொது இடத்தில் மருந்துகளை துாக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X