| பாலிதீன் கவர் தடை மாநகராட்சி 'ஸ்லோ' Dinamalar
பாலிதீன் கவர் தடை மாநகராட்சி 'ஸ்லோ'
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
02:16

திருப்பூர்:தமிழகத்தில் கடந்த ஜன., முதல் தேதி முதல், ஒரு முறை பயன்படுத்தி துாக்கியெறியப்படும் பாலிதின் கவர்கள், தட்டுகள், டம்ளர்கள் உள்ளிட்டவை பயன்படுத்த அரசு தடை விதித்தது. இந்த நடவடிக்கையில் முதலில் எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல், அடுத்தடுத்து பறிமுதல் மற்றும் அபராதம் ஆகியன மேற்கொள்ளப்பட்டன.அவ்வகையில், கடந்த ஜன., மாதம் முதல் மாநகராட்சி பகுதியில் நேற்று வரை மொத்தம் 31,304 கிலோ எடையுள்ள பாலிதின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையால், திருப்பூரில், பாலிதின் பொருள் பயன்பாடு சற்று குறைந்துள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வர், என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.நேற்று நடந்த சோதனையில், மாநகராட்சி பகுதியில், மொத்தம், 30 கிலோ பாலிதின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைகளுக்கு ஏழாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X