சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மணக்காடு காலனியில் சாலையை கொத்திப்போட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் பணி கிடப்பில் போட்டுள்ளதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.புவனகிரி ஊராட்சி ஒன்றியம், எறும்பூர் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மணக்காடு காலனியில் கடந்த மாதம் புதிய தார்சாலை அமைக்க ரூ. 9 லட்சத்து 19 ஆயிரம் நிதி ஒதுக்கி, தனியாரிடம் ஒப்பந்தம் விடப்பட்டது.மணக்காடு காலனி சாலையை கொத்திப்போட்டு சென்றவர்கள் பின்னர் எந்த பணியையும் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் வசிப்பவர்கள் சாலையை கடந்து செல்ல கடும் அவதி அடைகின்றனர்.தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி வாகனங்கள் மற்றும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை செல்ல முடியவில்லை.சம்மந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் இந்த தார்சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.