கடலுார்: மஞ்சக்குப்பம், ராஜாம்பாள் நகரில் மேன்ேஹால் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள், பொது மக்கள் அச்சமடைகின்றனர்.கடலுார், மஞ்சக்குப்பம், ராஜாம்பாள் நகரில், பாதாள சாக்கடை திட்டத்தில் மேன்ேஹால் அமைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் பெய்த மழைக்கு சாலையில் நடுவில் இருந்த மேன்ேஹால் திடீரென உள்வாங்கியது. அப்போது சாலையும் சேர்த்து உள்வாங்கியதால் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டது.இதனால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து, அங்கு கான்கிரீட் மூலம் புதிய மேன் ேஹால் அமைக்கும் பணி துவங்கியது. இப்பணி முழுமை பெறமால் கடந்த இரண்டு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.பள்ளம் மூடப்படாமல் எவ்வித பாதுகாப்புமின்றி திறந்து கிடக்கிறது. இரவு நேரத்தில் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், குழந்தைகள் பாதாள சாக்கடை பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது.எனவே, மஞ்சக்குப்பம் ராஜாம்பாள் நகரில் கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை மேன்ேஹால் பணியை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.