| காய்கறி மார்க்கெட் ஆக்கிரமிப்பு பண்ருட்டியில் பொதுமக்கள் அவதி Dinamalar
காய்கறி மார்க்கெட் ஆக்கிரமிப்பு பண்ருட்டியில் பொதுமக்கள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
02:17

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால், பொதுமக்கள், தொழிலாளர்கள் அவதி அடைகின்றனர்.பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டிற்கு தினந்தோறும் பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட பகுதியில் இருந்து லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. இங்கிருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பச்சைமிளகாய், கத்திரிக்காய், புடலை, வெண்டை, மாங்காய் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.மார்க்கெட்டிற்கு லாரிகள் சென்று வந்த சர்வீஸ் சாலை வடிகால் பணிக்காக துண்டிக்கப்பட்டது. இதனால், கடந்த ஓர் ஆண்டாக மார்க்கெட்டிற்கு வரும் வழியில் தரைக்கடைகள் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளன.இதனால், மார்க்கெட்டிற்கு வரும் காய்கறி மூட்டைகள் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் இறக்கப்பட்டு, தொழிலாளர்கள் மூலம் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி உயர்ந்துள்ளது. கூலி உயர்வால் காய்கறி விலையும் உயர்கிறது. பொதுமக்களும் மார்க்கெட் வந்து செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம், நகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X