| சாலையில் வைக்கப்படும் பேனர்களால் விபத்து அதிகரிப்பு Dinamalar
சாலையில் வைக்கப்படும் பேனர்களால் விபத்து அதிகரிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
02:19

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பிளக்ஸ் பேனர் அமைப்பதை தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மந்தாரக்குப்பத்தில் கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இங்கு வங்கிகள், ஏ.டி.எம்., மருத்துவமனை, பள்ளிகள், கடைகள் உள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துகின்றனர்.இச்சாலையில், அரசியல் கட்சி விளம்பரங்கள், திருமணவிழா, காதணி விழா உள்ளிட்ட விழாக்களுக்கு பிளக்ஸ் பேனர்கள் அமைக்கின்றனர். பல அடி உயரமுள்ள பிளக்ஸ் பேனர்கள் சாலையில் அமைப்பதால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது.போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றவும், விதிமுறை மீறி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X