| தேயிலை தொழிலாளர்கள் 'பிசி' Dinamalar
தேயிலை தொழிலாளர்கள் 'பிசி'
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
02:20

கூடலுார்:கூடலுார் பகுதியில் மழை குறைந்து இதமான காலநிலை நிலவுகிறது.கூடலுாரை ஒட்டிய கேரளா மலப்புரம் பகுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது. கூடலுார் பகுதியிலும் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்தது. குளிர்ச்சியான காலநிலையுடன், மழையுடன், மேக மூட்டமும் தொடர்ந்ததால், வாகன ஓட்டுனர்கள் பகல் நேரத்தில் சாலையில், 'மிஸ்ட்' லைட் பயன்படுத்தி இயக்கி வந்தனர். 'விபத்தை தவிர்க்க, வாகனங்களை நிதானமாக இயக்க வேண்டும்,' என, போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். நேற்று, காலை முதல் மழை குறைந்து, இதமான காலநிலை நிலவுகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்களில் பணி புரியும் பெண் தொழிலாளர்கள், கடந்த சில நாட்களுக்கு பின்பு, நிம்மதியாக, இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், முன்னெச்சரிக்கையாக, 'பிளாஸ்டிக்' போர்வையுடன் பணியில் ஈடுபட்டனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X