| தடுப்பு சுவர் பணி நிறைவு செய்ய யோசனை Dinamalar
தடுப்பு சுவர் பணி நிறைவு செய்ய யோசனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
02:21

கூடலுார்:'கூடலுார் ஊசிமலை அருகே, சாலை பழுதடைந்து போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் உள்ளதால், சாலையோர தடுப்பு சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுார் - நடுவட்டம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில், பழைய பாலங்களுக்கு மாற்றமாக, புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.அதில், ஊசிமலை அருகே, சாலையை அகலப்படுத்த, சாலையோரத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அப்பகுதியில் ஏற்கனவே இருந்த சிறிய தடுப்பு சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சாலையோரம் சேதமடைந்துள்ளது. அதிகளவில் வாகனங்கள் செல்லும் இச்சாலை மேலும், சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் உள்ளது.ஓட்டுனர்கள் கூறுகையில், 'அப்பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பது வரவேற்க கூடியது. அப்பகுதியில் ஏற்கனவே உள்ள தடுப்பு சுவர் உடைக்கப்பட்டதால், சாலையோரம் சேதமடைந்துள்ளது. பருவமழை துவங்கியுள்ளதால், அங்கு சாலை துண்டிக்கும் அபாயம் உள்ளது. எனவே, தடுப்பு சுவர் பணியை விரைந்து முடிக்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X