| நீலகிரியில் நுண்ணீர் பாசன திட்டம் Dinamalar
நீலகிரியில் நுண்ணீர் பாசன திட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
02:21

ஊட்டி:நீலகிரியில், நுண்ணீர் பாசன திட்டத்திற்கு, 4.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நீலகிரி தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் வாயிலாக பல திட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், பிரதான திட்டமாக, ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டம் செயல்பட்டு வருகிறது.நுண்ணீர் பாசன திட்டம் மூலம், 2019-20 ஆண்டிற் கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியத்தில் தெளிப்பு நீர் பாசன கருவிகள் வழங்கப்பட உள்ளது.சிறு,குறு விவசாயிகளுக்கு குறைந்த பட்சம், 0.40 ஏக்கர் முதல், 5 ஏக்கர் வரை, ஒரு விவசாயி இத்திட்டத்தில் பயன் பெறலாம்.இதர விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியத்தில் தெளிப்பு நீர் பாசன கருவிகள் வழங்கப்பட உள்ளது.மேலும், இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினரை சார்ந்த வேளாண் பெருங்குடி மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நடப்பு ஆண்டில், நீலகிரி விவசாயிகள், 2,050 எக்டர் பரப்பளவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 4.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகள், தாசில்தாரால் வழங்கப்பட்ட அனுபோக சான்று, சிறு குறு விவசாயிகளுக்கான சான்று, நிலவரைப்படம், மண் மற்றும் நீர், பரிசோதனை அறிக்கை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் ஆகியவைகளை இணைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, ஊட்டி-0423-2442012, குன்னுார்-0423-2231718, கோத்தகிரி-04266-273709, கூடலுார்- 0423-261376 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X