சிதம்பரத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டில் பொதுமக்கள் சிக்கித்தவிப்பு! நீர் நிலைகளை தூர்வார துரித நடவடிக்கை எடுக்கப்படுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
02:29

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருவதால், பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.



சிதம்பரம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளது. இதில் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 62,153 பேர் வசிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தலா 135 லிட்டர் தண்ணீர் தினந்தோறும் வழங்க வேண்டும். தற்போது 63 லிட்டர் தண்ணீர்தான் வழங்கப்படுகிறது. சிதம்பரம் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, கொள்ளிடம் நீர், ராஜன் வாய்க்கால் வழியாக கொண்டு வரப்பட்டு, சி.வக்காரமாரி தலைமை நீரேற்று நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டு, நகர பகுதியில் வழங்கப்படுகிறது.மேலும், மின்பம்பு,டேங்கர் லாரி உள்ளிட்டவைகள் மூலம் தினந்தோறும் 39 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது.




தினமும் 83 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில், 44 லட்சம் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. நகரத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெரும்பாலானோர் பணம் கொடுத்து கேன் வாட்டர் வாங்குகின்றனர்.நகராட்சி சார்பில் தினந்தோறும் காலை, மாலை குடிநீர் வழங்க வேண்டும்.




வறட்சி காரணமாக காலை மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.நகராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் பல பகுதிகளில் உப்பு மற்றும் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். குறிப்பாக நகராட்சி நான்காவது வார்டு அம்பேத்கர் நகரில் 400க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு மீன் மார்க்கெட் பகுதியிலுள்ள வாட்டர் டேங்க்கிலிருந்து வழங்கப்படும் குடிநீர் உப்பு கலந்திருக்கிறது. இதை அப்பகுதி மக்கள் உபயோகப்படுத்த முடிவதில்லை. அவர்கள் ரூ.30 கொடுத்து வாட்டர் கேனை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உப்பு நீர் குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் பலன் இல்லை.




குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு, தலைமை நீரேற்று நிலையம், சிவசிவ நகர், மின் நகர் ஆகிய மூன்று இடங்களில் ரூ.54 லட்சம் செலவில், ஆழ்துளை கிணறுகள் போடுவதற்கு நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என தெரியவில்லை .சிதம்பரம் நகராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நீண்ட காலமாக உள்ளது. ராட்சத மோட்டார்கள் வைத்து நிலத்தடி நீர் உறிஞ்சப் படுவதால் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.




நீர்வளத்தை பாதுகாக்க முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் ஆறுகளையும், துணை நீர்நிலைகளையும் தூர்வாரி பராமரித்து, தடுப்பணைகளை அதிகாரிகள் அமைக்க வேண்டும். இதன் மூலம் மழைக்காலங்களில் கொள்ளிடம் ஆற்று வழியாக உபரி நீர் வெளியேறி கடலில் கலப்பதை தடுக்கலாம் என்றும் விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.


 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X