| வட்டார போக்குவரத்து அலுவலர் பொறுப்பேற்பு Dinamalar
வட்டார போக்குவரத்து அலுவலர் பொறுப்பேற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
02:36

கடலுார்: கடலுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், புதிய வட்டார போக்குவரத்து அலுவலராக சரவணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.கடலுார் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்த மணி, ஓய்வு பெற்றார். இப் பொறுப்பை கூடுதலாக சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் கவனித்து வந்தார்.இந்நிலையில் கடலுார் வட்டார போக்குவரத்து அலுவலராக சரவணன் நேற்று பொறுப்பேற்றார். இவர் வேலுார் மாவட்டம் ராணிப்பேட்டையில், வட்டார போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றி, வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும் இவர், 2010-12ம் ஆண்டு வரை கடலுாரிலும், 2014-16 வரை பண்ருட்டியிலும் போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றியுள்ளார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X