| குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் Dinamalar
குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
02:38

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த பெருமுளை காலனி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, காலிக்குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திட்டக்குடி அடுத்த பெருமுளை காலனி பகுதியில், பொதுமக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.இதனால் அதிருப்தியடைந்த மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி காலி குடங்களுடன் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியிலுள்ள மினிடேங்க், கைபம்புகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X