| பி.சி., மாணவர்கள் விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு Dinamalar
பி.சி., மாணவர்கள் விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
02:40

கடலுார்: பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் ,சீர் மரபின மாணவர்கள் விடுதியில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர், சீர் மரபின மாணவ,மாணவிகள் விடுதியில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்காக மொத்தம் 40 விடுதிகளும், மாணவிகளுக்கு 17 விடுதிகளும் உள்ளது.கல்லுாரி,பாலிடெக்னிக்,ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்களுக்கு 4 விடுதியும், மாணவிகளுக்கு 6 விடுதிகளும் உள்ளது. பள்ளி விடுதியில் 4ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சேர்க்கை உண்டு.கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மாணவர்கள் சேரலாம். மாணவ, மாணவிகளுக்கு விடுதிகளில் உணவு, தங்கும் இடம் இலவசம். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை வழங்கப்படும்.விடுதிகளில் சேர்வதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.இருப்பிடத்திலிருந்து 8 கி.மீட்டர் துாரத்திற்கு மேல் இருக்க வேண்டும். தகுதியுடைய மாணவ,மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் இலவசமாக விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.பள்ளி மாணவர்களின் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை, விடுதி காப்பாளர் அல்லது பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் வரும் 20ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். கல்லுாரி மாணவர்கள் வரும் ஜூலை 15ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.மாணவர்களின் சாதி மற்றும் வருமான சான்றிதழ் விடுதியில் சேரும்போது அளித்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X