| கும்பாபிஷேகம் முடிந்த 2வது நாளில் கலசம் திருடு Dinamalar
கும்பாபிஷேகம் முடிந்த 2வது நாளில் கலசம் திருடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
02:41

சிறுபாக்கம்: கோவில் கும்பாபிஷேகம் முடிந்த இரண்டாவது நாளில், கலசம் திருடு போனதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கடலுார் மாவட்டம் சிறுபாக்கத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கடந்த 14ம் தேதி நடந்தது. நேற்று முன்தினம் இரவு ஊரணி பொங்கல் விழாவும் நடந்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம், கோவிலை பூட்டி விட்டு, உண்டியலில் இருந்த பணத்தை ஊர் முக்கியஸ்தர்கள் எடுத்து சென்றனர்.நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலுக்கு வந்த மர்மநபர்கள் உண்டியலையும், பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள கோபுர கலசத்தை திருடி சென்றனர். உண்டியலில் பணம் இல்லாததால் வயலில் வீசி சென்றனர்.சிறுபாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கும்பாபிஷேகம் முடிந்த இரண்டாவது நாளில் கோபுர கலசம் திருடு போனதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X