நடுரோட்டில் மின்கம்பங்கள்: மக்கள் அச்சம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
02:54

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், விவேகானந்தர் தெருவில், நடுரோட்டில் பழுதடைந்த மின் கம்பம் உயர் மின்னழுத்த கம்பிகளை தாங்கி நிற்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.திருக்கோவிலுார் நகரின் முக்கிய பகுதியாக இருக்கும், என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள விவேகானந்தர் தெருவில், சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளது. உயர் மின் அழுத்த கம்பிகளைத் தாங்கி நிற்கும் இந்த கம்பம் பழுதடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. ரோட்டின் நடுவே மின்கம்பம் இருப்பதால், வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இதனால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.பழுதடைந்த உயர் மின்னழுத்த கம்பத்தை அகற்றி, வேறு பாதையில் மின்கம்பியை எடுத்துச் செல்ல மின் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.கண்டமங்கலம்கண்டமங்கலம் இந்திரா நகரில் நியாய விலைக்கடைக்குச் செல்லும் பிரதான வீதியில் சிமென்ட் சாலையின் நடுவே தெரு மின் கம்பம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை போடப்பட்டபோது, வீதியின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றி, போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாமல் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.ஆனால் பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ரேஷன் கடைக்கு உணவு பொருட்கள் ஏற்றிச்செல்லும் லாரி, அப்பகுதி குடியிருப்புவாசிகள் தங்களுக்கு தேவையான ஜல்லி, செங்கல், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே பொதுமக்களின் நலன் கருதி கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X