| 'கழிவு நீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு' Dinamalar
'கழிவு நீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு'
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
03:00

விழுப்புரம்: தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.விழுப்புரம், சாலாமேடு பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் நகர், வி.ஜி.பி., நகர் கிழக்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திலும், விழுப்புரம் நகராட்சி ஆணையர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.மனு விபரம்:விழுப்புரம் வி.ஜி.பி., நகர் மூன்றாவது தெருவிலும், அருகில் உள்ள ராதாகிருஷ்ணன் நகரிலும், கடந்த 25 ஆண்டுகளாக, 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வெளியேறும் கழிவு நீர் சாலையில் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, தெருக்களில் கழிவு நீர் தேங்காமல் வெளியேறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், எங்கள் பகுதியில் தெருக்கள் குண்டும் குழியுமாக மாறி உள்ளதால் விபத்துக்கள் நடக்கிறது. மின் விளக்குகள் இல்லாததால் மாலை நேரத்திலேயே எங்கள் பகுதி இருளில் மூழ்கி விடுகிறது. இதனால், அடிக்கடி திருட்டு நடக்கிறது.எனவே, எங்கள் பகுதியில் தெரு மின் விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தடையில்லாமல் குடிநீர் கிடைக்கவும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X