| சாலையோரம் நிறுத்தப்பட்ட பைக்குகள் அதிரடியாக அகற்றி அபராதம் விதிப்பு Dinamalar
சாலையோரம் நிறுத்தப்பட்ட பைக்குகள் அதிரடியாக அகற்றி அபராதம் விதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
03:02

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போக்குவரத்துக்கு தடையாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் அதிரடியாக அகற்றி அபராதம் விதிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக பைக்குகள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.இதுகுறித்து போலீசார் எச்சரித்தும் வாகனங்கள் நிறுத்தப்படுவது தொடர்கதையாக இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று, கச்சேரி சாலையில் ஏராளமான வாகனங்கள் குறுக்கும், நெடுக்குமாக சாலையை அடைத்தபடி போக்குவரத்துக்கு வழியின்றி நிறுத்தப்பட்டிருந்தது.இதனைக் கண்ட போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் தர்மராஜ், முத்துக்குமார் உதவியுடன், அங்கிருந்த 30க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு கொக்கிகள் போட்டு பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.பறிமுதல் செய்த வாகனங்களுக்கு தலா 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவசியமின்றி வாகனங்களை அப்பகுதிகளில் நிறுத்துவதை தவிர்த்து உடனடியாக அகற்றிக்கொண்டனர்.இதேபோன்று சேலம், தியாகதுருகம், கச்சிராயபாளையம் சாலைகளிலும் வாகன ஆக்கிரமிப்புகளுக்கு அடுத்தடுத்து அபராதம் விதித்து பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் தொடரும் என டிராபிக் இன்ஸ்பெக்டர் ராஜ் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X