| கண்டன ஆர்ப்பாட்டம் Dinamalar
கண்டன ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
03:03

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம ஊராட்சி ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட சிறப்பு தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலர் முத்துக்குமரன், துணைச் செயலர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து சங்க மாவட்ட தலைவர் மூர்த்தி கோரிக்கைகளை விளக்கி பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டர்கள், கிராம துப்புரவு ஊழியர்கள், துாய்மைக் காவலர்களை பணிநிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டர்கள், துப்புரவு ஊழியர்கள் இறந்தால் அவர்களது குடும்ப வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும். பென்ஷன் 2 ஆயிரம் ரூபாயும், பணிக் கொடை 50 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X