விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரியில் நாளை 19ம் தேதி இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) மாதவி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில் 2019-20ம் ஆண்டிற்கான இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை 19ம் தேதி துவங்குகிறது.காலை 10:00 மணிக்கு சிறப்பு ஒதுக்கீடு (விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்) தகுதியுள்ள அனைவருக்கும், மதியம் 2:00 மணிக்கு பி.ஏ., ஆங்கிலம் பாடத்திற்கு சிறப்பு ஆங்கிலத்தில் பயின்றவர் பகுதி-2 ஆங்கிலத்தில் 100 முதல் 60 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.தொடர்ந்து, 20ம் தேதி காலை 10:00 மணிக்கு பி.ஏ., தமிழ் பாடத்திற்கு சிறப்பு தமிழ் பயின்றவர் பகுதி-1 தமிழில் 100 முதல் 70 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும் மற்றும் மதியம் 2:00 மணிக்கு பி.காம்., தொழில் பிரிவிற்கு தரம் எண்-1 முதல் 100 வரை கலந்தாய்வு நடக்கிறது.வரும் 21ம் தேதி காலை 10:00 மணிக்கு பி.எஸ்சி., - பி.சி.ஏ., பிரிவுகளில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், கணினி அறிவியல், மற்றும் கணினி பயன்பாட்டியல் ஆகியவற்றிற்கு பகுதி-3 பாடத்தில் 400 முதல் 275 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 24ம் தேதி காலை 10:00 மணிக்கு பகுதி-3 பாடத்தில் 274 முதல் 240 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.தொடர்ந்து, வரும் 25ம் தேதி காலை 10:00 மணிக்கு பி.ஏ., வரலாறு, பொருளியல் மற்றும் பி.காம்., வணிகவியல் (பொது) பிரிவுகளுக்கு பகுதி-3 பாடத்தில் 400 முதல் 250 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், வரும் 26ம் தேதி காலை 10:00 மணிக்கு பகுதி-3 பாடத்தில் 249 முதல் 200 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.