| போர்வெல் வாகனங்களுக்கு கடும் 'கிராக்கி' Dinamalar
போர்வெல் வாகனங்களுக்கு கடும் 'கிராக்கி'
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
03:06

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் போர்வெல் வாகனங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனது. இதனால், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் வறண்டு போயின. மேலும், விவசாய கிணறுகளும் தண்ணீரின்றி வறண்டன.இதன் காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இந்நிலையில், மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை போக்க போர் போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, தங்கள் பகுதிகளில் உள்ள போர்வெல் வாகனங்களை மக்கள் நாடியுள்ளனர்.அந்த வாகனம் மூலம் போர் போட, ஒரு அடிக்கு 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு போர்வெல் வாகனங்களை தேடிச்செல்வதால், மாவட்டத்தில் போர்வெல் வாகனங்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.விழுப்புரம் நகரில் போர் போடும் இடங்களில் 550 அடி ஆழத்திலும் மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில் 300 அடி ஆழத்திலும் தண்ணீர் கிடைக்கின்றது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X