| குடிநீர் கேட்டு சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை Dinamalar
குடிநீர் கேட்டு சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
03:07

விக்கிரவாண்டி: ராதாபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராதாபுரம், கருமார பேட்டை பகுதியில் வசிக்கும் தங்கள் பகுதிக்கு குடிநீர் இல்லை எனவும், தண்ணீர் தரக் கோரி யும் நேற்று காலை 11:00 மணியளவில் வழுதாவூர் - புதுச்சேரி சாலையில் காலி குடங்களுடன் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் சங்கர சுப்ரமணியன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அய்யனார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவ முருகன், ஆறுமுகம், ஹேமலதா, அமுதலட்சுமி, ஊராட்சி செயலர் சண்முகம் ஆகியோர் கொண்ட குழுவினர் பொதுமக்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில், கடந்த மாதம் 31ம் தேதி குடிநீர் கேட்டு சாலைமறியல் செய்ய வந்த போதே குடிநீர் தேவைக்கு போர் வெல் அமைக்க திட்டமதிப்பீடு தயார் செய்து கலெக்டருக்கு அனுப்பியுள்ளதாகவும், வரும் 21ம் தேதிக்குள் தேவையான இடங்களில் போர்வெல் அமைக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, அனைவரும் மறியலை கைவிட்டு 11:30 மணிக்கு கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X