அரசு பள்ளிகளை மேம்படுத்த முன் வாருங்கள்: முதல்வர், தொண்டு நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
04:33

புதுச்சேரி: அரசு பள்ளிகளை மேம்படுத்த வசதிகள் செய்து கொடுக்க, தனியார் தொண்டு அமைப்புகள் முன்வர வேண்டும் என, முதல்வர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார். புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள்- 167 அமைப்பு சார்பில், ஸ்மார்ட் வகுப்பறை வசதி செய்து கொடுத்துள்ளது. இந்த வகுப்பறை துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்வித்துறை இயக்குனர் ரத்ர கவுடு தலைமை தாங்கினார். ரவுண்ட் டேபிள் கவர்னர் வெங்கட்டரமணி வரவேற்றார்.ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்து முதல்வர் நாராயணசாமி பேசுகையில், புதுச்சேரி அரசு மட்டுமே இதுபோன்ற வசதிகளை செய்த தர இயலாது, தொண்டு நிறுவனங்களும் முன்வந்து அரசுடன் கூட்டு சேர்ந்து, அரசு பள்ளிகளை மேம்படுத்த வசதிகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும். ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள் அமைப்பு, சமுதாயத்திற்கு தேவையான பல பணிகளை செய்து வருகிறது. பெரிய மார்க்கெட்டில் குடிநீர் வசதி செய்து கொடுத்தது. பள்ளி நுாலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கியது உள்ளிட்ட பணிகளை செய்துள்ளது பாராட்டுக்குறியது. புதுச்சேரியில் அரசு தரப்பில் 120 ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் ஜீவானந்தம் அரசு உயர்நிலைப்பள்ளி துணை முதல்வர் சந்திரசேகர், தொண்டு அமைப்பின் தலைவர் திலிப், செயலர் செல்லா, பொருளாளர் ராஜன், கணேஷ், சுரேஷ் பட்டேல், கவுதம், கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X