| சுற்றுலா வளர்ச்சிக்கழக ஊழியர்கள் தெருமுனை பிரசாரம் Dinamalar
சுற்றுலா வளர்ச்சிக்கழக ஊழியர்கள் தெருமுனை பிரசாரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
04:34

புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் முறைகேடுகளை களைய வலியுறுத்தி, ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழுவினர், தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில், பதவி உயர்வில் முறைகேடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுற்றுலா வளர்ச்சிக்கழக ஊழியர் சங்கத்தினர், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த 15ம் தேதி, சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.நேற்று, தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடற்கரை சாலை சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலகம் முன்பு துவங்கிய பிரசாரம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், எல்லப்பிள்ளைச்சாவடி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.போராட்டக்குழு பொதுச்செயலர்கள் கஜபதி, விஜயராகவன், தலைவர் முகுந்தன், செயலர் மாது மற்றும் ஆதி, மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X