சேதராப்பட்டில் ஜல்லிக்கட்டு: அதிகாரிகள் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
04:34

வில்லியனுார்: சேதராப்பட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான இடத்தை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது. வரும் தை பொங்கலுக்கு பிறகு புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த அதிகாரிகள் குழு இடம் தேர்வு செய்து வருகின்றனர். அதன்படி புதுச்சேரி ஏ.எப்.டி., மைதானம், வேல்ராம்பட்டு ஏரி ஆகிய இடங்களை கடந்த சில தினங்களுக்கு முன் ஆய்வு செய்தனர். அந்த இரு இடங்களும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்றதாக அமையவில்லை என அதிகாரிகள் குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து சேதராப்பட்டு ஏரிக்கரை சாலையில் தெற்கு பகுதியில் கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை பொருளாதார சிறப்பு மண்டலம் அமைப்பதற்கு கடந்த சில ஆண்டிற்கு முன் அரசு ஒதுக்கியது. பொருளாதார சிறப்பு மண்டலம் திட்டம் கிடப்பில் போட்டதால், அந்த இடத்தை ஜிப்மர் மருத்துவமனை கிளை அமைப்பதற்கு அரசு வழங்கி உள்ளது.இந்நிலையில் நேற்று காலை ஜல்லிக்கட்டு நடத்தும் குழு தலைவரான கலெக்டர் அருண் உத்தரவின் பேரில், தொழில் நுட்ப கமிட்டி குழுவை சேர்ந்த எஸ்.பி., ஜிந்தா கோதாண்டராமன், உள்ளாட்சித் துறை இணை இயக்குனர் கிட்டி பல்ராமன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், கால்நடை மருத்துவ கல்லுாரி டீன், சேதராப்பட்டு இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சேதராப்பட்டு ஜிப்மர் இடத்தை பார்வையிட்டனர்.சேதராப்பட்டு இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அதிகாரிகள் குழுவினர் முடிவு செய்துள்ளபோதிலும், சேதராப்பட்டு போலீசார் சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளதாக காரணம் காட்டியதால் ஜல்லிக்கட்டு குழுவினர் யோசித்து வருகின்றனர்.வில்லியனுார் தேர்வு செய்யப்படுமா?வில்லியனுார் மைய இடமாக உள்ளது. திருக்கனுார், மதகடிப்பட்டு, நெட்டப்பாக்கம், பாகூர், சேதராப்பட்டு என பல்வேறு பகுதிக்கு பஸ்களும், வந்து செல்லும் போக்குவரத்துக்கு ஏற்ற மையப்பகுதியாக வில்லியனுார் அமைந்துள்ளதால், விவேகானந்தா அரசு பள்ளி அருகே உள்ள சாமியார்தோப்பு இடம் அல்லது கண்ணகி பள்ளி அருகே உள்ள தனியார் இடத்தை ஆய்வு செய்து ஜல்லிக்கட்டு நடத்த கமிட்டியினர் முயற்சி மேற்கொண்டால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X