| மதுரை கலெக்டர் அலுவலகம் முற்றுகை Dinamalar
மதுரை கலெக்டர் அலுவலகம் முற்றுகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
06:10

மதுரை: சிம்மக்கல் சாய் டயர்ஸ் உரிமையாளர் விவேகானந்தகுமார். இவரும், கடை ஊழியர் சரவணக்குமாரும் நேற்று முன் தினம்(ஜூன் 16) இரவு கடையை அடைத்து விட்டு செல்லுாரில் ஓட்டலில் சாப்பிட்டனர். பின் இருவரும் வைகை செல்லுார் பாலத்தில் சென்ற போது போலீசார் வாகன சோதனைக்காக நிறுத்தியபோது அவர்கள் நிறுத்தாததால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.



தலையில் காயமுற்ற விவேகானந்தகுமார் அரசு மருத்துவமனையில் இறந்தார். இதனால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்ககோரி குழந்தையுடன் அவரது மனைவி கஜப்பிரியா மற்றும் பல்வேறு அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இறப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை பிரிவுகளில் வழக்கு பதிய வேண்டும். 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என கோரினர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சுமூக முடிவு ஏற்படாததால் அவர்கள் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் முகாமிட்டிருந்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X