| தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் Dinamalar
தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
06:55

திண்டுக்கல் : 'திண்டுக்கல்லில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்' என, சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.



பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் 2019 ஜன.1 ஒரு முறை பயன்படுத்தி துாக்கி ஏறியும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சியில் பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி அலுவலகம், கோட்டை மாரியம்மன் கோயில், கோபாலசமுத்திரம் கரை உட்பட 5 இடங்களில் பிளாஸ்டிக்

சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டது.



தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்திய 5,600 வீடுகள், வணிக வளாகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 18 டன் பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில்லறை வியாபாரிகள் மறைமுகமாக பாலிதீன் பயன்படுத்தி வந்தனர். நேற்று முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்தது. திண்டுக்கல்லில், முதல் முறை தவறு செய்தால் குறைவான தொகையும், மீண்டும் மீண்டும் தவறு செய்தால் ஒரு லட்சம் வரை அபராதம், மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X