| சர்குலர் பஸ்: நுகர்வோர் வலியுறுத்தல் Dinamalar
சர்குலர் பஸ்: நுகர்வோர் வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
06:56

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் வனத்துறை அமைச்சர்

சீனிவாசனிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.



மனுவில் கூறியிருப்பது: பழநி மலைக்கோயிலுக்கு வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பழநி பஸ் ஸ்டாண்டில் கோவில் தகவல் மையம் செயல்படவில்லை. பக்தர்களை ஏமாற்றி புரோக்கர்கள் பணம் பறிக்கின்றனர். ரோப்கார் நிலையத்திற்கு செல்ல பஸ் வசதி வேண்டும். கோயில், கிரி விதியில் உள்ள கண்காணிப்பு கேமரா வெறும் காட்சிப் பொருளாக உள்ளது. யானைப் பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக தற்காலிக கடைகள் பல உள்ளன.



ஓட்டல்களில் உணவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். குப்பையை அகற்றி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல்லில் நகர் பகுதிக்குள் மக்களுக்கு

வசதியாக சுற்றுப்பேருந்து (சர்க்குலர் பஸ்கள்) இயக்க நடவடிக்கை எடுக்க

வேண்டும் என, கூறியிருந்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X