| அரசுக் கல்லூரியில் 11 பாடப் பிரிவுகள் நீக்கம் Dinamalar
அரசுக் கல்லூரியில் 11 பாடப் பிரிவுகள் நீக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
07:37

பெரம்பலூர்: குரும்பலூர் அரசுக் கல்லூரியில், 11 பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டதைக் கண்டித்து, மாணவ மாணவியர், சாலை மறியலில் ஈடுபட்டனர்.



பெரம்பலூர், குரும்பலூரில், 18 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த, பாரதிதாசன் பல்கலை உறுப்புக் கல்லூரி, இந்தாண்டு முதல், அரசுக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது.இக்கல்லூரியில், இளநிலையில், 14 பாடப் பிரிவுகள்; முதுநிலையில், ஆறு பாடப் பிரிவுகளில், வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.இந்தாண்டு முதல், இளநிலையில், ஐந்து பாடப் பிரிவுகள்; முதுநிலையில், ஆறு பாடப் பிரிவுகள் என, மொத்தம், 11 பாடப் பிரிவுகளுக்கு, மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக, கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து, கல்லூரி நேற்று திறக்கப்பட்டது. 11 பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டதை கண்டித்து, கல்லூரி மாணவ மாணவியர், பெரம்பலூர் துறையூர் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன், கல்லூரி முதல்வர் மற்றும் பெரம்பலூர் போலீசார் நடத்திய பேச்சில், உடன்பாடு ஏற்பட்டு, மறியல் கைவிடப்பட்டது.


 

Advertisement
மேலும் பெரம்பலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X