| செயற்பொறியாளர் பணியிடங்கள் காலி: சேலம் மாநகராட்சியில் பணிகள் சுணக்கம் Dinamalar
செயற்பொறியாளர் பணியிடங்கள் காலி: சேலம் மாநகராட்சியில் பணிகள் சுணக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
08:24

சேலம்: சேலம் மாநகராட்சியில், செயற்பொறியாளர் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது, பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.


சேலம் மாநகராட்சியில், பொறியாளர், சுகாதாரம், கணக்கு மற்றும் வருவாய் பிரிவுகளாக நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதில், பொறியாளர் பிரிவுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பாக செயற்பொறியாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இதில், நகரமைப்பு, திட்டங்கள் என இரண்டு செயற்பொறியாளர்களும், மற்ற பணிகளுக்கு இரண்டு செயற்பொறியாளர்களும் செயல்பட்டு வந்தனர். இதில் நகரமைப்பு பிரிவு செயற்பொறியாளராக இருந்த கலைவாணி, 2018, நவ., 26ல், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திட்டப்பணிகளுக்கு செயற்பொறியாளராக இருந்த ரவி, மே, 31ல் ஓய்வு பெற்றார். ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்த்து வந்த செயற்பொறியாளர் காமராஜ் கடந்த மார்ச், 30ல், ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். குடிநீர் உள்ளிட்ட வழக்கமான பணிகளை கவனித்து வந்த செயற்பொறியாளர் அசோகன், மாநகர பொறியாளராக பதவி உயர்வு பெற்றார். இதன் மூலம், கடந்த சில மாதங்களில் செயற்பொறியாளர் பணியிடங்கள் அனைத்தும் காலியாகிவிட்டன. ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட, பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடந்து வரும் நிலையில், மாநகராட்சியின் முக்கிய பொறுப்புகள் காலியாக உள்ளதால், பல பணிகளில் சுணக்கம் காணப்படுகிறது. பதவி உயர்வு மூலமாகவோ, வேறு இடங்களிலிருந்து மாறுதல் வழங்குவதன் மூலமாகவோ, உடனடியாக செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X