| அரசு கல்லூரிகளில் வகுப்புகள் துவக்கம்: ராகிங் தடுப்பு உறுதிமொழி ஏற்பு Dinamalar
அரசு கல்லூரிகளில் வகுப்புகள் துவக்கம்: ராகிங் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
08:31

சேலம்: அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில், நேற்று வகுப்புகள் துவங்கின. தமிழகத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், பருவத்தேர்வு முடிந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விடுமுறை முடிந்து, நேற்று முதல் வகுப்புகள் துவங்கின. சேலம் அரசு இருபாலர் கல்லூரி, மகளிர் கல்லூரி, சாரதா கல்லூரி உள்ளிட்டவற்றில், கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில், முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கு, பூக்கள் கொடுத்து சீனியர் மாணவ, மாணவியர் வரவேற்றனர். மேலும், 'ராகிங்கில் ஈடுபட மாட்டோம்' என, அனைத்து மாணவ, மாணவியரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முதல்கட்ட கவுன்சிலிங் மட்டுமே நடந்து முடிந்துள்ளதால், இளங்கலை முதலாம் ஆண்டு வகுப்புகளில், மாணவர்கள் முழுமையாக வரவில்லை.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X