| சேலம் விமான நிலையத்தில் 'தொட்டுணரக்கூடிய' பாதை தயார் Dinamalar
சேலம் விமான நிலையத்தில் 'தொட்டுணரக்கூடிய' பாதை தயார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
08:34

ஓமலூர்:சேலம் விமான நிலையத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்ல, புதிய வழி அமைக்கப்பட்டுள்ளது.


சேலம் விமான நிலையத்தில், 2018, மார்ச், 25 முதல் சேலம்-சென்னை இடையே பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதற்காக, விமான நிலையத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு தொடர்பான பணிகள், பயணிகள் வசதிக்காக மேம்படுத்தப்பட்டு வருகிறது. விமான நிலையத்துக்கு வரும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக, சிறப்பு பாதை ஏற்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் டெர்மினல் நுழைவாயிலில் இருந்து, உள்ளே செல்லும் வரை, 'தொட்டுணரக்கூடிய' பாதை அமைக்கப்பட்டுள்ளது. சிறிய வட்ட, நீளமான அளவில், ஸ்டெய்ன்லெஸ் இரும்பு தகடுகள் தரையில் பதிக்கப்பட்டுள்ளன. பார்வையற்ற நபர்கள், காலால் உணர்ந்து, அதன் மேல் நடந்து செல்ல ஏதுவான வகையில் சிறப்பு வழி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையத்தில் இரண்டு இடங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கழிவறை கட்டும் பணி நடந்து வருகிறது.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X