| தேசிய மருத்துவமனை பாதுகாப்பு சட்டம்: மத்திய அரசுக்கு மருத்துவர்கள் வலியுறுத்தல் Dinamalar
தேசிய மருத்துவமனை பாதுகாப்பு சட்டம்: மத்திய அரசுக்கு மருத்துவர்கள் வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
08:34

சேலம்: தேசிய அளவில், மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் கொண்டு வர, மத்திய அரசுக்கு மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேற்கு வங்கத்தில், மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில், மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகம் முன், மனித சங்கிலி போராட்டம் நடந்தது. ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். மருத்துவர்களை தாக்கும் சமூக விரோதிகளை கடுமையாக தண்டிக்கவும், வலுவான மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக் கோரியும் முழக்கமிட்டனர். முன்னதாக, பணி பாதிப்பின்றி மருத்துவர்கள், கறுப்புபட்டை அணிந்து, நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த பின், உணவு இடைவேளையில் போராட்டம் நடத்தினர். மாநில செயலர் செந்தில், மாவட்ட தலைவர் ராஜசேகர் ஆகியோர் கூறியதாவது: தமிழகத்தில், 10 ஆண்டுகள் தண்டனையுடன் கூடிய மருத்துவமனை பாதுகாப்பு சட்டம், 2008ல், கொண்டு வந்தும் அதை முழுவீச்சில் செயல்படுத்தவில்லை. தமிழகம், ஆந்திரா போல, தேசிய அளவில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்து கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X