| டாஸ்மாக் கடை எதிரே ஐஸ் வியாபாரி மர்ம சாவு Dinamalar
டாஸ்மாக் கடை எதிரே ஐஸ் வியாபாரி மர்ம சாவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
08:35

ஓமலூர்: டாஸ்மாக் கடை எதிரே, மர்மமான முறையில் ஐஸ் வியாபாரி இறந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். ஓமலூர், தின்னப்பட்டியை சேர்ந்த அர்ச்சுனன், 55, குச்சி ஐஸ் வியாபாரி. குடிபழக்கம் உள்ள இவர், நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்து விட்டு, மாலையில் காமலாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் குடித்த பின், எதிரே உள்ள சாலையோரத்தில் தரையில் விழுந்துள்ளார். நேற்று அதிகாலை வரை அங்கேயே இருந்ததால், அப்பகுதியை சேர்ந்த சிலர் எழுப்பியுள்ளனர். உடல் அசைவின்றி கிடந்ததால், போலீசாருக்கு தகவல் அளித்தனர். சோதனையில், அர்ச்சுனன் இறந்தது தெரியவந்தது. அவர் போதையில் இறந்தாரா அல்லது வேறு காரணம் உண்டா என, ஓமலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X