ஜவுளிக்கடை அதிபரை கடத்திய வழக்கில் மேலும் 2 பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
08:37

சேலம்: சேலம், ஜவுளிக்கடை அதிபரை கடத்திய கும்பலை சேர்ந்த, மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.


ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காளிசரண், 46, சேலம், பேர்லேண்ட்ஸ், சிவாயநகர், இரண்டாவது கிராசில் வசித்து வருகிறார். இவர், ஐந்து ரோட்டில் மொஷித் சில்க்ஸ் ஜவுளி கடை நடத்தி வருகிறார். கடந்த, 9ல் இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அவர், தனது பைக்கில் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பணம் செலுத்த சென்றார். வீட்டில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் ஆம்னி வேனில் இருந்து இறங்கிய, ஆறு பேர் கொண்ட கும்பல், காளிசரணை வேனில் கடத்தி செல்ல முயன்ற போது, அப்பகுதி மக்கள் திரண்டதால், கும்பல் தப்பியோடியது. காளிசரண் அளித்த புகார்படி, அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கடத்தலில் ஈடுபட்ட மணக்காட்டை சேர்ந்த ராஜா மகன் சந்தோஷ், 24, சின்னத்திருப்பதி, பாண்டியன் தெருவை சேர்ந்த விஜயன் மகன் காசிவிஸ்வநாதன், 26, ஆகியோரை கடந்த, 13ல் கைது செய்தனர். மேலும், கடத்தல் கும்பலில் இடம் பெற்றிருந்த, அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்த வெங்கடேசன் மகன் உலகநாதன், 24, அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் விஜயகுமார், 22, ஆகியோரையும் கைது செய்தனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X