| மாடுகளை மேகாலயாவில் விற்பதாக கூறி சேலம் விவசாயிகளிடம் ரூ.14 லட்சம் மோசடி Dinamalar
மாடுகளை மேகாலயாவில் விற்பதாக கூறி சேலம் விவசாயிகளிடம் ரூ.14 லட்சம் மோசடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
08:38

சேலம்: சேலத்தில் இருந்து மாடுகளை வாங்கி, மேகாலயா மாநிலத்துக்கு அனுப்பிய வியாபாரி, 14 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக, விவசாயிகள், சேலம், எஸ்.பி.,யிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.


சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி, கவுண்டன் தெருவை சேர்ந்த கோவிந்தன் மகன் மந்திரி தலைமையில், 10 விவசாயிகள், எஸ்.பி., தீபா கானிகேரை சந்தித்து அளித்த புகார் மனு: நாங்கள் ஆடு, மாடுகளை பராமரித்தும், விவசாயம் செய்தும் வாழ்ந்து வருகிறோம். எங்களை கடந்த ஆண்டு பிப்ரவரியில், சேலம், சங்கர் நகரை சேர்ந்த ஜெயபால் மகன் அசோக்,32, நேரில் சந்தித்து மேகாலயா மாநிலத்துக்கு, பசு மாடுகளை வாங்கி அனுப்பி வருவதாகவும். உங்களின் மாடுகளை நல்ல விலைக்கு விற்று தருகிறேன் என, தெரிவித்தார். சேலத்தில் இருந்து மாடுகள் ரயில் மூலம் மேகாலயா சென்றடைந்தவுடன், சேலம் மாவட்ட கலெக்டர் மூலம், எனக்கு பணம் வந்து விடும். உடனடியாக நான் அந்த பணத்தை உங்களுக்கு வழங்கி விடுகிறேன் என, தெரிவித்தார். அவரின் ஆசை வார்த்தைகளை நம்பி, கடந்த ஆண்டு மார்ச் மாதம், சேலம் ரயில்வே ஸ்டேஷனில், 60 சிந்து இன மாடுகளை ஒப்படைத்தோம். எங்களின் கண் முன்னாள் அவற்றுக்கு கால்நடை டாக்டர்களால் பரிசோதனை செய்து, ரயிலில் ஏற்றி அனுப்பினர். மாடுகள் மேகாலயா சென்ற நிலையில், எங்களுக்கு பணம் வரவில்லை. இது குறித்து அசோக்கிடம் கேட்ட போது, அவர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பணம் வந்தவுடன், தருகிறேன் என கடந்த, ஓர் ஆண்டுக்கும் மேலாக எங்களை அலைக்கழிப்பு செய்து வருகிறார். எங்களை போல், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களிடம், ஆசை வார்த்தைகளை கூறி மாடுகளை வாங்கி, வெளி மாநிலங்களுக்கு அனுப்பி, மோசடியில் ஈடுபட்டு வந்ததால், விவசாயிகள் அளித்த புகார்களின் படி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்களின் மாடுகளை வாங்கி, 14 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட அசோக் மீது நடவடிக்கை எடுத்து, எங்களின் பணத்தை திருப்பி தராவிட்டால், குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், விசாரணை நடத்த, எஸ்.பி., தீபா கானிகேர் உத்தரவிட்டுள்ளார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X